"ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பியது" -

#world_news #State #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Hormuz
Abi
2 months ago
"ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பியது" -

அமெரிக்காவின் தொடர்ச்சியான துறைமுக முற்றுகைகளுக்குப் பதிலடியாக, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையின்Hormuz) கட்டுப்பாடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை அறிவித்துள்ளது.

ஈரானின் IRIB ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்கா 'முற்றுகை' என்ற போர்வையில் கடல்சார் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக ஈரானிய இராணுவக் கட்டளைப்பீடம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளால், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்ப்பாதை இப்போது எமது ஆயுதப் படைகளின் கடுமையான நிர்வாகம் மற்றும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

" ஈரானில் இருந்து புறப்படும் மற்றும் ஈரானை நோக்கி வரும் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்தை அமெரிக்கா முழுமையாக உறுதிப்படுத்தும் வரை, ஹோர்முஸ் நீரிணையின் மீதான இந்த இறுக்கமான கட்டுப்பாடு நீடிக்கும் என்றும் ஈரானிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4